வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னையில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட முதலமைச்சர், பின்னர், கடலூர், நாகை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை தொடர்கிறது. 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இன்று மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார்.
