ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ஈரான் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அதனைத் தகர்த்துள்ளதாக வெளியாகி இருக்கும் அதிர்ச்சித் தகவல், சர்வதேசச் சந்தையில் பெரும் பதற்றத்தையும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் சரிவையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா ஏற்கனவே ஈரான் மீது கடற்படை முற்றுகையை அமல்படுத்தியுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு எரிபொருள் விலை கடுமையாக உயரும் அபாயம் உருவாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், இந்த நேரடித் தாக்குதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு முழுமையான போர்ச் சூழலை நோக்கியே நகர்த்தி வருவதால் உலக நாடுகள் மிகுந்த கவலையுடன் இந்த நிகழ்வை உற்றுநோக்கி வருகின்றன.