நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மும்பையில் பருவமழை வலுவடைவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுவதால், வழக்கமாகப் பருவமழை தொடங்கும் காலத்தில் பதிவாகும் முதலாவது பரவலான பலத்த மழைப்பொழிவை அந்நகரம் இன்று எதிர்கொள்ளக்கூடும்.
அதே நேரத்தில், பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், உள் மாவட்டங்களில் நிலவி வந்த இடியுடன் கூடிய மழைப்பொழிவு இனி வரும் காலங்களில் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது.
வட கடலோரத் தமிழகப் பகுதியான சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளபோதிலும், மாலை நேரப் பொழுதில் எந்தெந்த இடங்களில் மழை பெய்யும் என்பதை அந்தந்த நேரத்தின் காற்றின் திசை மற்றும் வேகமே (Wind pattern) இறுதி செய்யும்.
