ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை தயாரிக்கும் பணி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
அனுமன் ஜெயந்திக்காக 1,00,008 வடை தயாரிப்பதற்காக 2500 கிலோ உளுத்தம் பருப்பு பயன்படுத்தப் படுகிறது.
600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, சீரகம் 35 கிலோ, 125 கிலோ உப்பு ஆகியவை பயன் படுத்தப்படுகிறது.
இந்த பணியில் 40 பேர் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்ச நேயர் பக்தர் களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இவரை தரிசனம் செய்ய வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந் தோறும் வழிபட்டு , ஆஞ்சநேயரின் அருள் பெற்று செல்கின்றனர்.
ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப் பட உள்ளது இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்ச நேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப் படுகிறது.
இந்த நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவிக்க 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி நாமக்கல் ஆஞ்ச நேயர் கோவில் மண்டபத்தில் தொடங்கி நடை பெற்று வருகிறது.
இதற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப் பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமை யிலான 40 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்தடைந்தனர்.
இவர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக நாமக்கல் ஆஞ்ச நேயருக்கு வடை தயாரித்து கொடுக்கின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டும் வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனுமன் ஜெயந்திக்காக 1,00,008 வடை தயாரிப்பதற்காக 2500 கிலோ உளுத்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது.
600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, சீரகம் 35கிலோ, 125 கிலோ உப்பு ஆகியவை பயன் படுத்தப்படுகிறது.
பொருட்களை சுத்தம் செய்து மாவரைத்து வடை செய்யும் பணி இரவு பகல் என 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெறும். வடை தயாரிக்கும் பணி சென்ற டிசம்பர் -24 செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி 4 நாட்கள் நடை பெற்று கொண்டு இருக்கிறது.
அதன்பின்னர் வடை மாலை கோர்க்கும் பணி நடைபெறும். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று 1 லட்சத்து 8 வடை மாலையுடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அந்த வடை பிரசாதமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
