அதிகம் கவனிக்கப்படாத நிதி சார்ந்த விஷயம் இது இதையும் ஒரு வகையிலான முறைகேடு என்றே அழைக்க தோன்றுகிறது கடந்த நிதியாண்டில் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீடு விண்ணப்பங்களை காப்பீடு நிறுவனங்கள் நிராகரித்துள்ளது.
அதற்கு முந்தைய நிதியாண்டில் சுமார் 22,000 கோடி ரூபாய் நிராகரிக்கப்பட்ட நிலையில் தனது ஒரே ஆண்டில் 19.10% அதிகரித்துள்ளது. நிறுவனங்களின் இந்த செயல்பாடுகளால் மருத்துவ காப்பீடுகள் எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 3.7 சதவீதமாக குறைந்து போய் உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் காப்பீடு நிறுவனங்களுக்கு பிரீமியம் வாயிலாக கிடைக்கும் வருமானம் சுமார் 6.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது
அதாவது தோராயமாக 8.30 லட்சம் கோடி ரூபாய். ஏன் நிராகரிக்கப்படுகிறது? நிராகரிக்கப்பட்டால் அதை எப்படி சரி செய்வது? நீதிமன்றங்களுக்கு செல்லும் ஒரு வழி இருக்கிறது என்றாலும் அது கொடுக்கக்கூடிய சிரமத்தை மக்கள் தாங்கக்கூடிய நிலையில் இல்லை!
அவசர காலத்தில் ஏற்படும் பாதிப்பு எதிர்காலத்தை சிக்கல் நிறைந்ததாக ஆக்க கூடாது என்பதற்காக வாயைக் கட்டி வயரை கட்டி காப்பீடு எடுக்கும் சாமானியர்களுக்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது ஆனால் அதைக் கேட்கத்தான் ஆள் இல்லை!
