அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆளும் தி.மு.க அனுதாபி, பிரியாணிக்கடை ஒனர் ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை விவரம் குறித்து மாலை அறிவிக்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்தார்.
குறைந்த பட்ச தண்டனை வழங்கும்படி ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாகவும், 70க்கும் மேற்பட்ட சான்றாவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
