14.8 கிலோ தங்கத்தை கடத்தியதாக பெங்களூரு விமான நிலையத்தில் கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
நடிகை ரன்யா ராவ் அடிக்கடி துபாய் சென்று வந்ததை , டிஆர்ஐ அதிகாரிகள் அவரது நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் இன்று வசமாக சிக்கினார்.
ரன்யா ராவ் கர்நாடகாவில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் உறவினராம் .

