Wednesday, March 18, 2026
HomeUncategorizedநமது வீட்டில் விளக்கேற்றும்போது செய்யவேண்டிய விஷயங்கள்..!

நமது வீட்டில் விளக்கேற்றும்போது செய்யவேண்டிய விஷயங்கள்..!

நமது வீட்டில் தினந்தோறும் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளனர். மேலும், முதன்முறையாக மணம் முடிந்து வீட்டிற்குள் வரும் மருமகளையும் முதலில் விளக்குதான் ஏற்ற சொல்லுவார்கள். வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் விளக்கேற்றி செய்வதுதான் தமிழக மக்களின் வழக்கம். விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது.

காலையில் 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். சூரியன் உதிப்பதற்கு முன் நம் வீட்டில் விளக்கேற்றுவது என்பது, மிக மிக நன்மையை அளிக்கும். இந்த விளக்கு ஏற்றும்போது குளித்து விட்டு விளக்கேற்ற வேண்டும்.

அதேபோல் மாலையில் சூரியன் மறைந்த பிறகு விளக்கேற்ற வேண்டும். அதாவது 06.00 மணிக்கு விளக்கேற்ற வேண்டும். நாம் ஏற்றும் விளக்கு கிழக்கு நோக்கியும், விளக்கினை ஏற்றுபவர்கள் மேற்கு திசை பார்த்த படி இருக்க வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments