Monday, April 27, 2026
Homeசெய்திகள்நீட் ஹால் டிக்கெட் நாளை வெளியீடு!

நீட் ஹால் டிக்கெட் நாளை வெளியீடு!

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான ஹால் டிக்கெட்டுகள் (Hall Ticket) நாளை வெளியாகின்றன.

இந்த ஆண்டு நீட் தேர்வெழுதத் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மாணவர்கள் உட்பட இந்தியா முழுவதும் 24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாளை வெளியாகும் ஹால் டிக்கெட்டுகளைத் தேசிய தேர்வு முகமையின் (NTA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நெருங்கி வரும் சூழலில், ஹால் டிக்கெட் குறித்த இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments