தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) 2026-ன் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மே 3-ஆம் தேதி நடைபெற்ற அந்தத் தேர்வை ரத்து செய்வதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) இன்று (மே 12, 2026) அதிரடியாக அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOG) நடத்திய விசாரணையில், தேர்வுக்கு முன்னதாகவே சுமார் 120-க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய ‘கெஸ் பேப்பர்’ (Guess Paper) பகிரப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மத்திய அரசின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்விற்குப் பதிலாக மறுதேர்வு நடத்தப்படும் என்றும், அதற்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும், ஏற்கனவே செலுத்திய தேர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் என்.டி.ஏ. தெளிவுபடுத்தியுள்ளது. 22 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவப் படிப்பு கனவுடன் இருந்த மாணவர்களிடையே இந்தத் தேர்வு ரத்துச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
