மத்திய அரசின் ஒப்புதலுடன் தேசியத் தேர்வு முகமை (NTA), 2026-ஆம் ஆண்டிற்கான நீட் (NEET-UG) மறுதேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருந்த இந்தத் தேர்வு வரும் ஜூன் 21, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு தொடர்பான செய்திகளில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் சூழலில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேவையற்ற குழப்பங்களுக்கு ஆளாகாமல், தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் முறையான தகவல் தொடர்பு சாதனங்களை மட்டுமே நம்பி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு https://nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 011-40759000, 011-69227700 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், மருத்துவக் கனவோடு காத்திருக்கும் மாணவர்கள் தற்போது தீவிரமாகத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர்.
