Wednesday, February 4, 2026
HomeUncategorizedநெல்லை ஆணவக் கொலை- சுர்ஜித்தின் பெற்றோர்களான இரு எஸ்ஐக்களும் சஸ்பெண்ட்!

நெல்லை ஆணவக் கொலை- சுர்ஜித்தின் பெற்றோர்களான இரு எஸ்ஐக்களும் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியை சேர்ந்த கவின்குமார் (28) என்ற ஐடி ஊழியர் நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்த நிலையில் தன்னுடைய தாத்தாவுக்கு சிகிச்சை வழங்குவதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதிக்கு அழைத்து சென்ற நிலையில் அவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித் என்ற வாலிபர் கவினை வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது. அதாவது சுர்ஜித் சகோதரியுடன் கவின்குமார் நெருங்கி பழகிய நிலையில் அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆத்திரத்தில் சுர்ஜித் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளார்.

தன்மகன் ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டிப்பாக அவனுக்கு நீதி வேண்டும் எனவும் உயிரிழந்த கவின் குமாரின் தந்தை கண்ணீரோடு பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இந்த ஆணவக் கொலை வழக்கில் கைதான குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணவேணி எஸ்ஐ பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்துவரும் நிலையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments