Home செய்திகள் பெண்கள் பாதுகாப்புக்காக உருவான ‘சிங்கப்பெண்’ படை – வைரலாகும் புதிய யூனிஃபாரம்!

பெண்கள் பாதுகாப்புக்காக உருவான ‘சிங்கப்பெண்’ படை – வைரலாகும் புதிய யூனிஃபாரம்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் டெல்லிப் பயணத்தால், பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் புதிய சீருடை குறித்த இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் முதற்கட்டமாகக் கையெழுத்திட்ட முக்கியக் கோப்புகளில் ஒன்றான இந்தச் சிறப்புப் படைக்காக, பிரத்யேகமான அதிநவீன வடிவமைப்புடன் கூடிய புதிய சீருடைப் படம் தற்போது வெளியாகியுள்ளது.

வழக்கமான முழு காக்கி உடைக்கு மாற்றாக, இதில் ‘நேவி ப்ளூ’ (Navy Blue) நிறத்திலான அரைக்கைச் சட்டையும், தோள்களில் இரண்டு நட்சத்திரங்களுடன் கூடிய எபாப்லெட்ஸ் மற்றும் கயிறுகளும் (Lanyard) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், கறுப்பு நிறத் தொப்பி, வலதுபுற நெஞ்சில் வெல்க்ரோவினால் ஆன பெயர்ப் பலகை, இடதுபுற நெஞ்சில் தாங்கள் சார்ந்த பிரிவின் பிரத்யேக மெட்டல் லோகோ மற்றும் இடது கை சட்டையில் போலீஸ் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இவற்றுடன் காக்கி நிறத்திலான நேர்த்தியான ட்ரௌசர்ஸ், கறுப்பு நிற வெப் பெல்ட் மற்றும் களப்பணிகளுக்கு ஏதுவாக இலகுவான கறுப்பு நிற ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் என முற்றிலும் கார்ப்பரேட் மற்றும் சர்வதேசத் தரத்திலான தோற்றத்தில் இந்தச் சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது;

முதலமைச்சரின் வருகைக்குப் பின் இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ள சூழலில், தற்போதே காவல்துறை வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் இந்த ‘சிங்கப்பெண்’ சீருடைப் படம் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

Exit mobile version