Friday, May 8, 2026
Homeசெய்திகள்மெஜாரிட்டி உறுதி? பனையூரில் விண்ணை முட்டும் TVK உற்சாகம்!

மெஜாரிட்டி உறுதி? பனையூரில் விண்ணை முட்டும் TVK உற்சாகம்!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படவிருக்கும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத் தலைமையகத்தின் முன்பு தொண்டர்களின் கொண்டாட்டம் விண்ணைத் தொடுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய், தற்போது காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மெஜாரிட்டியை உறுதி செய்துள்ளதால், ஆட்சியதிகாரத்தை நோக்கி தவெக நெருங்கி வருகிறது.

இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, சென்னை சாலைகளில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு மேளதாளங்கள் முழங்க நடனமாடியும், வானவேடிக்கைகள் நிகழ்த்தியும் கொண்டாடி வருகின்றனர்.

“தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய்” என்ற முழக்கங்களுடன் இனிப்புகள் வழங்கி மகிழும் தொண்டர்களால், அந்தப் பகுதியே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments