Home Uncategorized ஒமிக்ரானால் முதல் உயிரிழப்பு

ஒமிக்ரானால் முதல் உயிரிழப்பு

பிரிட்டனில் ஒமிக்ரான் பாதிப்பால் ஒருவர் இறந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு ஏற்படாத நிலையில் முதன்முறையாக பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதிதாக கண்டறியப்பட்ட ‘ஒமிக்ரான்’ (Omicron) எனும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு, உலகம் முழுவும் வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸால், அந்நாட்டில் ஒமிக்ரான் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் புதியதாக 1,200-க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதுவரை அந்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 3000 கடந்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் போரீஸ் ஜான்சன், முதன்முறையாக ஒமிக்ரான் வைரஸ் பாதித்த ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவித்துள்ளார். டெல்டா வேரியண்டுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் வைரஸினால் ஏற்படும் பாதிப்பு குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்ற அவர், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் வேகம் மும்மடங்காக உள்ளதாக தெரிவித்தார். 

Exit mobile version