Home Uncategorized ஸ்ரீரங்கத்தில் பரமபத வாசல் திறப்பு

ஸ்ரீரங்கத்தில் பரமபத வாசல் திறப்பு

இன்று கார்த்திகை வளர்பிறை ஏகாதசி. ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி இன்று கொண்டாடப்படுகிறது. சுவாமி நம்பெருமாள் ரத்தின அங்கி, வெள்ளி சல்லா பட்டு, கிளி மாலை அணிந்து அதிகாலை 4 மணிக்கு வைகுண்டவாசல் கடந்து திருமாமணி மண்டபத்தை சென்றடைந்தார் (படம்) . பெருமாளுடன் பக்தர்கள் செல்ல இந்த ஆண்டும் அனுமதி இல்லை. இதே நாளில், திருக்குருங்குடியில் (நெல்லை மாவட்டம்) கைசிக ஏகாதசி கொண்டாடப்படுகிறது. எளியகுடியில் பிறந்த நம்பாடுவானின் பக்தியை எம்பெருமான் உலகறியச் செய்த திருநாள். இன்று இரவு ஸ்ரீவைஷ்ணவ நம்பியின் திருமுன்பாக நம்பாடுவான் புராணம் நாடகமாக நடைபெறும். இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது.

Exit mobile version