1951 ஆம் ஆண்டு அக்டோபர் 21 தேதி பிறந்த ஜனசங்கம், பின்னர் 1977 ஆண்டில், ஜனதா கட்சியுடன் இணைந்தது. ஆனால் ஜனதா கட்சியின் நடவடிக்கைகள் விரும்பியவண்ணம் இல்லாத சூழ்நிலையில் அக்கட்சியிலிருந்து உடைத்துக் கொண்டு வெளியே வந்த பழைய ஜனசங் கட்சியினர் மீண்டும் புதுப்பிறப்பெடுத்து ஏப்ரல் 6 தேதி 1980 வருடம் “பாரதிய ஜனதா கட்சி” யை துவக்கினார்கள்.
இப்புதிய தேசியக் கட்சியின் முதல் தலைவராக அடல் பிகாரி வாஜ்பாய் பொறுப்பேற்றுக் கொண்டார்.

