Friday, April 24, 2026
HomeUncategorizedபேருந்தில் இருந்து தவறி விழும் மாணவி - போலீசார் வழக்குப்பதிவு செய்து

பேருந்தில் இருந்து தவறி விழும் மாணவி – போலீசார் வழக்குப்பதிவு செய்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் விக்கிரமராஜா அவரது மகள் இனியா ஸ்ரீ.

இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்த இனியா ஸ்ரீ, அப்போது அவ்வழியாக வந்த பேருந்தில் ஏரி  பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது நேரம் போதாமையால் பேருந்தை பள்ளிமுன் நிறுத்தவில்லை எனவும், அப்படியே இறங்குமாறும் நடத்துனர் பதிலளித்ததாகவும் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து நிற்காத பேருந்தில் இருந்து மாணவி இறங்கியபோது இடதுபுறம் விழுந்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பேருந்தில் பயணித்த பயனாளிகள் மாணவியை மீட்டு முதல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேருந்தில் இருந்து தவறி விழும் மாணவி சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments