திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு ஹம்ச வாகன சேவை நடந்தது.
அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா நோய் தொற்று விதிமுறைகளை பின்பற்றி பிரம்மோற்சவ விழா நடந்து வருவதால், சற்று தூரத்தில் நின்றபடி பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவர் மலையப்பசாமியை வழிபட்டு செல்கிறார்கள்.
