தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் விலாசம் கேட்பது போல் அவர்கள் அணிந்திருக்கும் செயின் பறிக்கும் பிரபல குற்றவாளி சென்னையில் கைது சென்னை வேளச்சேரி காந்தி நகரில் வசிப்பவர்.
அகிலா இவர் சம்பவத்தன்று வேளச்சேரி நூறடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது விலாசம் கேட்பதுபோல் ஒருவர் வந்து அகிலா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துச் சென்றதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பார்த்த பொழுது செயின் பறிக்கும் அந்த குற்றவாளி கலை தாஸ் என்பது தெரியவரவே நேற்று இரவு குற்றவாளியை கைது செய்து அவனிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்
