பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நேற்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது .
பான்-ஆதார் இணைப்புக்கு பல முறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ரூ.1,000 அபராதத்துடன் ஆதாா்-பான் இணைக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
தற்போது இதற்கான கால அவகாசம் நேற்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இதுவரை இணைக்கப்படாத பான் காா்டுகள் அனைத்தும் ஜூலை 1 முதல் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
