Home Uncategorized போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார்

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார்

தற்போது நடிகர், நடிகைகளின் பெயர்களில் போலியாக டுவிட்டர் கணக்கு ஆரம்பிப்பது இப்போது தொடர்கதையாக வருகிறது. சமீபத்தில் நடிகர் சார்லி இதுதொடர்பாக போலீஸிடம் புகார் அளித்திருந்தார், அதனைத் தொடர்ந்து தற்போது நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களும் தற்போது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரில்,  தனது பெயரில் டுவிட்டரில் உலா வரும் போலி கணக்கு குறித்து கமிஷனர் அலுவலகத்தில் வக்கீலுடன் வந்து புகார் அளித்துள்ளார். இதனால் தனது நிம்மதியே போய்விட்டதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்றும் செந்தில் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version