Home செய்திகள் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது: முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க தலைமைச் செயலகம் வரும் கிராம...

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது: முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க தலைமைச் செயலகம் வரும் கிராம மக்கள்!

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகப் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று நண்பகல் 12 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்- யை நேரில் சந்திக்கவுள்ளனர்.

விவசாய நிலங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், பரந்தூரில் அமையவிருந்த பன்னாட்டு விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டு, குடியிருப்பு மற்றும் விவசாய பாதிப்புகள் குறைவாக உள்ள மாற்று இடம் கண்டறியப்படும் என்று சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் நேற்று அறிவித்தார்.

பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கிராம மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ள நிலையில், முதலமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவிக்க அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தரவுள்ளனர்.

Exit mobile version