Home Uncategorized ஆதினங்கள் வழங்கும் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும்

ஆதினங்கள் வழங்கும் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும்

தமிழ்நாடு ஆதினங்கள் வழங்கும் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும்” – உள் துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

புதிய கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் மக்களவையில் பிரதமர் நரேந்திரமோடி ஆதினம் முன்னிலையில் புனிதமான ‘செங்கோலை’ உரிய மரியாதையுடன் நிறுவுவார்.  நமது நாடு சுதந்திரமடைந்த போது, ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில், “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்” என்ற தேவார திருப்பதிகத்தைப் பாடி, தமிழகத்தைச் சேர்ந்த அருள்மிகு திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள், பண்டித நேரு அவர்களிடம் சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப் போன்ற செங்கோலை வழங்கினார்.

தமிழ் மன்னர்கள் ஆட்சியின் முக்கிய அங்கமாக விளங்கிய செங்கோலின் முக்கியத்துவம் குறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பில் நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு 
@AmitShah
 அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி.”
இதன் பொருள் உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

ஆனால், அதற்குப் பிறகு, அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்ட செங்கோல், தற்போது நமது பிரதமர்  மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துள்ளனர். 

Exit mobile version