பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல், இம்மாதம் 31 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மதிப்பெண் கணக்கீட்டில் நிலவும் குழப்பங்களைத் தவிர்க்க, சான்றிதழில் தேர்ச்சி மட்டும் குறிப்பிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், உயர்கல்வி சேர்க்கைக்கு 9ஆம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியாகிறது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
எனவே, பள்ளி மாணவர்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.” இவ்வாறு தெரிக்கப்பட்டுள்ளது.
