தமிழக அரசு நேற்று முன்தினம், மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து 118 நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 250 பஸ்கள் ஓசூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருக்கோவிலூர், கோவை, திருச்சி, மதுரை, கும்பகோணம், காஞ்சீபுரம், சென்னை, ஊட்டி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால், இரு மாநில பயணிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
