Thursday, March 12, 2026
HomeUncategorizedபுதிய வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன

புதிய வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன

மக்கள் தொகை அதிகம் உள்ள சென்னை போன்ற  நகரங்களில் புறநகர் பகுதியில் இருந்துதான் அதிகம் பேர் பணிக்காகவும், கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காகவும் சென்னைக்கு வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இன்றளவும் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.

இந்த நிலையில் புறநகர் மின்சார ரயில்களின் சேவையை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் நிறைந்த வந்தே மெட்ரோ என்ற புதிய ரயில் சேவையை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல்- கடற்கரை-செங்கல்பட்டு இடையே  வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.  4 பெட்டிகள்  ஒரு யூனிட்டை கொண்டிருக்கும் வகையில் புதிய வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக  12 பெட்டிகளுடன் இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments