Home Uncategorized புதிய வருமான வரி மசோதா இன்று தாக்கல்

புதிய வருமான வரி மசோதா இன்று தாக்கல்

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது, புதிய வருமான வரி மசோதா இந்த கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

அதன்படி மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இந்த புதிய வருமான வரி சட்டமானது 536 பிரிவுகள், 16 அட்டவணைகள், 23 அத்தியாயங் களை உள்ளடக்கிய 622 பக்கங்களை கொண்டதாக உள்ளது. இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்றக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்படும்.

பின்னர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த புதிய வருமான வரிச்சட்டம் நடைமுறைக்கு வரும்.

Exit mobile version