Tuesday, March 17, 2026
HomeUncategorizedபுயலில் இருந்து மக்களை பாதுகாப்பது தான் முதல் வேலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

புயலில் இருந்து மக்களை பாதுகாப்பது தான் முதல் வேலை – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

அரசியல் பேச விரும்பவில்லை மக்களை முதலில் பாதுகாக்க வேண்டும் மக்களை பாதுகாக்க வேண்டிய,அவர்களின் அரசியல் நையாண்டி கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இல்லை. – முதலமைச்சர் முக ஸ்டாலின்

கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெய்த மழையின் போது இரவு பகல் பாராமல் வேலை செய்த அனைத்து பணியாளர்களுக்கும் எனது  முதல் நன்றிகள் – முதலமைச்சர்

மாநில அவசர கால செயல்பாட்டு மையம் பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மின்சாரத்துறை உட்பட அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் இயங்கும் – முதலமைச்சர்

மிக்ஜாம் புயல் நாளை மறுநாள் கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் புயலுக்காக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்

 அமைச்சர்கள் கேஎன்.நேரு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதன்பின்பு செய்தி அவர்களை சந்தித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது,

மாவட்ட ஆட்சியர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அழைத்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

121 பண்ணோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது 6927 மையங்களில் பாதிப்புக்கு உள்ளாக கூடிய பகுதிகளில் அங்கிருந்து வரக்கூடிய பொது மக்களை நிவாரண முகங்களுக்கு அழைத்து வந்த தங்க வைக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பா மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவள்ளூர் கடலூர் செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 255 பேர் கொண்ட ஒன்பது குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்…

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது..

கடலோர மாவட்டங்களில் உள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும் பொது மக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது எதனால் அனைத்து படகுகளுக்கும் பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது புயல் மற்றும் நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு ஊடகங்கள் வாயிலாகவும் செய்திகளை வெளியிட்டு எச்சரிக்கையை ஏற்படுத்தி வருகிறோம்….

புயலின் நோய்களின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள பொதுமக்கள் செய்ய வேண்டிய செய்யக்கூடாதவைகள் குறித்து விளக்கமாக தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம் திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பிற்கு உள்ளாகிக்குள்ள இடங்களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பணியாளர்கள் ஏற்பட்டு வருகிறார்கள். மாநில அவசர கால செயல்பாட்டு மையம் பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மின்சாரத்துறை உட்பட அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதிக கன மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளதால் மின்கம்பங்கள் மின் கம்பிகள் மரங்கள் அதன் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ள காரணத்தால் பொதுமக்கள் தேவை இல்லாமல் கண்டிப்பாக வெளியில் வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி அறிவுரைகள் படி நிவாரண முகங்களில் தங்கமாரும் கேட்டுக்கொள்கிறேன் அங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது சென்னையில் பொறுத்தவரை அமைச்சர் கே என் நேரு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு மாசுப்பிரமணியன் சேகர் பாபு ஆகியோர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் 

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அமைச்சர் தாமோ அன்பரசன் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முத்துசாமி ராணிப்பேட்டை மாவட்டத்தில் காந்தி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்

ஆங்காங்கே இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு செய்யக்கூடிய உதவிகளை அவர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெய்த மழையின் போது இரவு பகல் பாராமல் அனைத்து பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அடுத்த இரண்டு நாட்களுக்கும் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை சீரமைக்கவும் கற்பனைப்பு உணர்வோடு பணியாற்றவும் கேட்டுக்கொள்கிறேன் ஊடகங்களும் அரசு செயல்பாடுகளுக்கு துணை நிற்க வேண்டும்.

அரசியல் பேச விரும்பவில்லை மக்களை முதலில் பாதுகாக்க வேண்டும் மக்களை பாதுகாக்க வேண்டிய பணிகளை ஈடுபட்டதெல்லாம் அவர்களைப் போல அரசியல் நையாண்டி கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இல்லை.

மழைநீர் வடிகால்கள் ஒரு வாரம் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன ஏற்கனவே புதிதாக போடப்பட்டுள்ளது ஏற்கனவே உள்ள பழைய வடிகால்களும் தூர்வாரம் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தேவைப்படக்கூடிய எல்லா இடங்களிலும் அவசியம் ஏற்படும் இடங்களில் எங்கெங்கெல்லாம் பாதுகாப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளது ஆயிரம் மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டுள்ளது.

பேரிடர் குழுக்கள் ஏற்கனவே வந்துள்ளது எங்கெல்லாம் மழை பெய்து கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments