Home உலகம் வியூஸ்க்காக பித்தலாட்டம்.. தட்டி தூக்கிய போலீஸ்..பிரேசிலில் ஷாக்!

வியூஸ்க்காக பித்தலாட்டம்.. தட்டி தூக்கிய போலீஸ்..பிரேசிலில் ஷாக்!

பிரேசிலில் யூடியூப் வீடியோக்களின் பார்வைகளை போலியாக அதிகரிப்பதற்காக இயங்கி வந்த ரகசிய ‘வியூ பார்ம்’ (YouTube View Farm) ஒன்றை அந்நாட்டு போலீஸார் அதிரடி வேட்டையின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

பல நாட்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், ஒரு அறையின் கூரை மற்றும் சுவர்களில் நூற்றுக்கணக்கான செல்போன்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு, இடைவிடாது யூடியூப் வீடியோக்களை ஓடவிட்டு பார்வைகளைச் செயற்கையாக அதிகரித்து வந்தது அம்பலமாகியுள்ளது.

இசை மற்றும் வீடியோ படைப்புகளின் ரீச்சை (Reach) முறைகேடாக உயர்த்தி, அல்காரிதத்தை ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நூதன மோசடி, சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் உலகில் பிரபலம் அடைவதற்காகவும், விளம்பர வருவாய்க்காகவும் மக்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.

Exit mobile version