AI image
‘இந்திய வேலைவாய்ப்பு நிலை 2026’ (State of Working India 2026) அறிக்கை, நாட்டின் இளைஞர்களிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினரில் சுமார் 40 சதவீதம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
உயர்கல்வி கற்றும் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காதது அல்லது வேலை சந்தையில் நிலவும் திறன் இடைவெளி (Skill Gap) போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகை (Demographic Dividend) என்று போற்றப்படும் இளைஞர் சக்தியை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால், இது எதிர்காலத்தில் பெரும் பொருளாதார மற்றும் சமூகச் சவால்களை உருவாக்கும் என அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
