பொங்கல் பரிசுத் தொகையை பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், வங்கி கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக கணக்கு தொடங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பரிசுத் தொகையை நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ள நிலையில், சுமார் 17 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்கு இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
