தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, வரும் 2024 பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை ஜனவரி 2-வது வாரம் முதல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரத்திலோ, ஜனவரி முதல் வாரத்திலோ இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜனவரி 2-வது வாரத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது

