Home செய்திகள் வெற்றி அலைக்கு பின் ஆலோசனை கூட்டம் – தமிழக அரசியலில் எதிர்பார்ப்பு உச்சம்!

வெற்றி அலைக்கு பின் ஆலோசனை கூட்டம் – தமிழக அரசியலில் எதிர்பார்ப்பு உச்சம்!

தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிப் பெரும் எழுச்சியைக் கண்டுள்ள நிலையில், கட்சித் தலைவர் விஜய் இன்று பனையூர் தலைமை அலுவலகத்தில் தனது கொள்கைத் தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகிய சமூகப் போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தியது, திராவிட மற்றும் சமூக நீதித் தத்துவங்களில் தாரக மந்திரமாகத் தனது கட்சியை முன்னிறுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. 118 இடங்கள் என்ற தனிப் பெரும்பான்மைக்கு வெறும் 10 இடங்களே குறைவாக உள்ள சூழலில், இன்று மாலை வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் அவர் நடத்தவுள்ள ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் கார்கள் கொண்ட முதலமைச்சரின் கான்வாய் குறித்த கட்டிங் கண்ணையா தகவல்கள் நம் ஆந்நை குழு நண்பர்கள் கவனத்துக்கு –

முதல்வர் கான்வாயில் ஏற்கெனவே 6 வெள்ளை நிற வாகனங்கள் இருந்தன. இந்நிலையில், தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய நவீன 6 கடொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார்கள் இணைக்கப்பட்டு இப்போது 15-க்கும் அதிகமான கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்களில் பாதுகாப்பு அதிகாரிகள், உபகரணங்கள் மற்றும் ஜாமர் கருவிகள்,கேமராக்கள் பொருத்தப்பட்டி ருக்கும். குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எஸ்பிஜி அதிகாரிகள் பாதுகாப்புக்கு வருவார்கள். முதல்வர்களைப் பொறுத்த வரை, ‘கோர்செல்’ எனப்படும் தனிப்பிரிவு காவலர்கள் பாதுகாப்பு அரணாக செயல்படுவார்கள். இந்ததனிப்பிரிவில் கூடுதல் எஸ்பி.க்கள், டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் இருப்பார்கள்.

இதுதவிர, இரண்டுக்கும் மேற்பட்ட ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார்களும் அந்த கான்வாயில் இடம் பெற்றுள்ளன. மிக முக்கியமாக இந்திய பணக்காரர்களின் பிரியமான சொகுசு கார் மாடலான டொயோட்டா வெல்ஃபையர் எம்பிவி (Toyota Vellfire MPV) ரக காரும் முதலமைச்சர் கான்வாயில் உள்ளது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 1.5 கோடிக்கும் அதிகம் ஆகும். இதுதவிர, உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110) கார் மாடலும் இந்த கான்வாயில் உண்டு.

இந்த வாகனங்களில் 3 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.காரின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கேமராக்கள், சுற்றிலும் நிகழும் அனைத்தையும் படமாக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. முதல்வர் வாகனத்துடன் இந்த வாகனங்கள் செல்லும்போது, பாதுகாப்பு அதிகாரிகள் காரின் கதவருகில் நின்று பயணிக்கும் வகையில் தேவையான அமைப்புகள் இந்த வாகனங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

Exit mobile version