மத்திய ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானைச் சந்தித்து, எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து அவர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இந்த ஐந்து நாடுகளுடனான பயணத்தின் மூலம் பசுமை எரிசக்தி, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய மைல்கற்களை எட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, சர்வதேச அளவில் நிலவும் சவாலான சூழலில், நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படவும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மேம்படுத்தவும் பிரதமரின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.