Home செய்திகள் சென்னையில் 53 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி!

சென்னையில் 53 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி!

சென்னையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்க கருத்தடை செய்யும் பணியும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி சென்னையில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கருத்துடை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்படுகிறது.

 இதுவரை 2580 தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடி தடுப்பூசி ரேபிஸ் செலுத்தும் சிறப்பு முகாம் கடந்த மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சிறப்பு முகாம் மூலம் மாநகராட்சி கால்நடைத்துறை ஊழியர்கள் மண்டலம் வாரியாக சென்று தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதுவரையில் 53 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாத இறுதிக்குள் ஒரு லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version