Home கிளாசிக் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி பிறந்த நாளின்று!

கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி பிறந்த நாளின்று!

1960-களில் தமிழ்த் திரையுலகமே கொண்டாடிய சரோஜாதேவி பிறந்தபோது என்ன நடந்துச்சு தெரியுமோ?

பெங்களூருவைச் சேர்ந்த பைரப்பா – ருத்தரம்மா தம்பதிக்கு நான்காவது மகளாப் பொறந்தவர், சரோஜாதேவி. அவிய்ங்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் பிள்ளைகள் இருக்க, நான்காவதாக பையன் பிறப்பான் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தாய்ங்க . ஆனா பிறந்தது, நம்ம அபிநய சரஸ்வதி.

பின்னாளில் இதைப் பற்றி சொல்லும்போது, ”நானும் பெண்ணாகப் பிறந்துட்டதால் என் தாத்தாவுக்கு பயங்கர கோபம். ‘யாருக்கு வேண்டும் இந்தச் சனியன்?’ அப்படீன்னு முணுமுணுப்பாராம். அப்படி திட்டியதாலோ என்னவோ நான் தவழ்கிற வயதில் இருந்தபோது எனக்கு முடக்குவாதம் வந்துடுச்சு. என் அம்மா எனக்காக விரதம் இருந்த சமயத்திலும், ‘இது செத்தா சாகட்டுமே’ என்பாராம் தாத்தா. ஆனால், நான் வளர்ந்து பெரியவளானச்சே என்னை அதிகமா ஆசீர்வதிச்சவர் அதே தாத்தா”னு சொந்னார் சரோஜாதேவி.

முறைப்படி பரதம் தெரியாவிட்டாலும், முகபாவனைகளிலும் அங்க அசைவுகளிலும் பரத முத்திரைகளை ஜஸ்ட் லைக் தட் எக்ஸ் பண்ணக்கூடியவர் சரோஜாதேவி. ஸ்கூலில் படிகறச்சே இசைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இந்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த கன்னட திரையுலக ஜாம்பவான் ஹொன்னப்ப பாகவதர், சரோஜாவின் குரலில் அசந்துட்டார். தன்னுடைய படத்தில் பின்னணிப் பாடுவதற்கு அழைத்துள்ளார். மகிழ்வுடன் பாடல் ஒத்திகைக்காகச் சென்றவரின் நடை ம்கற்று முகப் பொலிவைப் பார்த்தாய்ங்க . வெள்ளித்திரை தாரகை சரோஜாதேவி ஆனார்.

இந்தக் கன்னடத்து பைங்கிளியை, கேமரா வழியாகப் பார்த்த அன்றைய நடிகர்கள், ‘ஒரு பக்கம் பார்த்தால் பத்மினி; மறுபக்கம் பார்த்தால் வைஜெயந்தி மாலா’ அப்படின்னு கொண்டாடிநாய்ங்க .

அப்பேர்ப்பட்ட அழகுகொண்டவர், தன் கெரியரின் ஆரம்பத்தில், ‘தங்கமலை ரகசியம்’ -ங்கற படத்தில் ஒத்தைப் பாடலுக்கு நடனமாடினார். சிம்ரன் நடிச்ச ‘ஜோடி’ படத்தில் த்ரிஷா தலைகாட்டியதுமாதிரி, ‘பார்த்திபன் கனவு’ -ங்கற சினிமாவில் நாயகி வைஜெயந்தி மாலாவுக்குத் தோழியாகத் தலைகாட்டியிருக்கிறார் சரோஜாதேவி.

ஒரு சூழலில் ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியா சரோஜாதேவியை நடிக்கவைக்கும் பேச்சு எழுந்ததும், ‘அய்யே தம்மாம் துண்டு வேசம் கட்டி . குரூப் டேன்ஸ் ஆடும் பெண், எம்.ஜி.ஆருக்கு ஜோடியா?’னு பல எதிர்ப்பு குரல்கள் ஒலிச்சுது . அதை எல்லாம் தாண்டி சரோஜாதேவிக்கு மேக்கப் மற்றும் ஸ்கிரீன் டெஸ்ட் முடிஞ்சுது. எதையோ யோசிச்சபடி உட்கார்ந்திருந்த எம்.ஜி.ஆரிடம் பக்கத்தில் இருந்த சிலர் கொஞ்சம் துணிச்சலா , ‘ சின்னய்யா .அந்த பொண்ணு காலை தாங்கித் தாங்கி நடக்கிறா. நாயகி வேசத்துக்குச் சரிப்பட்டு வருமா?’-முன்னு கேட்டிருக்காய்ங்க . அதற்கு எம்.ஜி.ஆர், ‘ அட ..அந்த நடையும் அழகாக இருக்குல்லே ‘ னு குறை சொன்னவய்ங்க வாயை அடைச்சுப்புட்டார். இதன்பிறகு எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் சோடி சேர்ந்து நடிச்சார் இந்த அபிநய சரஸ்வதி.

ஜெமினி கணேசனுடன் ‘கல்யாண பரிசு’ படத்தில் நடிக்கும்போது, சரோஜாதேவிக்கு சுத்தமாத் தமிழ் தெரியாது. ஒரு ரூபா – அப்படீங்கற டயலாக்கைக் கூட ‘வரு ரூபா’ -னு உச்சரிச்சு, பல டேக் வாங்கி டைரக்டர் ஶ்ரீதரை டென்ஷனாக்கிப்புட்டார். ஒரு கட்டத்துக்குப் பிறகு, ஜெமினி கணேசனே வசனங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். இதனால், தான் பேசவேண்டிய வசனங்களை மறந்துடுவாராம் ஜெமினி.

பரதநாட்டியம் தெரியாது; நாடகத்தில் நடித்த அனுபவம் கிடையாது; கவர்ச்சி காட்டவே மாட்டார் என வெள்ளித்திரையில் ஜொலிப்பதற்கு தேவையான பல விஷயங்கள் சரோஜாதேவியிடம் இல்லாதபோதும், தன் உழைப்பாலும் நளினத்தாலும் மட்டுமே ஜெயித்தவர் இந்தக் கன்னடத்து பைங்கிளி.

Exit mobile version