Tuesday, March 17, 2026
HomeUncategorizedசபரிமலை ஐயப்பன் கோயில் - தரிசன நேரம் அதிகரிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் – தரிசன நேரம் அதிகரிப்பு

கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை சென்ற மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. அந்நாள் முதல் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டே இருக்கின்றனர்.

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக சபரிமலை கோயிலில் பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டன. இதனால், பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார். அதாவது வழக்கமாக இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். 

தற்போது கூடுதலாக ½ மணி நேரம் அதிகரிக்கப்பட்டு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என கூறினார். ஏற்கனவே தரிசன நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் ½ மணி நேரம் கூடுதல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதாவது 24 மணி நேரத்தில் 18½ மணி நேரம் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments