Tuesday, February 17, 2026
HomeUncategorizedஸ்டாலின் ஓட்டிய சைக்கிளின் விலை?

ஸ்டாலின் ஓட்டிய சைக்கிளின் விலை?

முதல்வர் ஸ்டாலின் 4ம் தேதி மகாபலிபுரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவர் ஓட்டிய சைக்கிள் ரூ.81 ஆயிரத்து 500 விலை கொண்டது. இந்த ‘பெடல்ஸ்’ சைக்கிளை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ‘டெய்ஜோ’.

சென்னை அம்பத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மூன்று வகை சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது. இதில் 81 ஆயிரத்து 500 ரூபாய் விலை உடைய ‘பெடல்ஸ் சி2’ என்ற வகை சைக்கிளையே முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்துகிறார். 120 கிலோ எடை வரை உள்ள நபர்கள் மட்டுமே இந்த சைக்கிளை பயன்படுத்த முடியும்.

48 செ.மீ. நீளம் உள்ள சைக்கிளின் ‘பிரேம்’ அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. 7.0 ஏ.எச். ‘லித்தியம் அயன் பேட்டரி’ உடைய 250 வாட்ஸ் திறன் உடைய மோட்டார் இந்த சைக்கிளில் பொருத்தப் பட்டுள்ளது. ஏழு ‘கியர்கள்’ உடைய இந்த சைக்கிளை பெடல் செய்தால் மட்டுமே இயக்க முடியும். சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் பெடல் செய்வதை எளிமைப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

சைக்கிளின் முன்பக்க பொருத்தப்பட்டுள்ள ‘ஷாக் அப்சர்வ்ஸ் ஹைடிராலிக்’ முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ‘பெடல்ஸ்’ செயலி வாயிலாக இந்த சைக்கிளை இயக்க முடியும். எல்.சி.டி. திரை பொருத்தப்பட்டுள்ளது. சைக்கிளின் முன்புறம் பின்புறம் 25 எல்.யு.எக்ஸ். அளவு உடைய எல்.இ.டி. ‘லைட்’ பொருத்தப் பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments