Home செய்திகள் சமூக ஊடக ஹைப் vs கள யதார்த்தம் – இளைஞர்கள் குறைவு, பழைய கட்சிகள் ஆதிக்கம்!

சமூக ஊடக ஹைப் vs கள யதார்த்தம் – இளைஞர்கள் குறைவு, பழைய கட்சிகள் ஆதிக்கம்!

சமூக ஊடகங்களில் தென்பட்ட அதீத பரபரப்பிற்கும், வாக்குச்சாவடிகளில் நிலவிய கள யதார்த்தத்திற்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி இருப்பதை இந்தத் தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தேர்தல் களம் முழுக்க தவெக (TVK) உள்ளிட்ட புதிய கட்சிகளின் தாக்கம் இணையத்தில் அதிகமாகப் பேசப்பட்டாலும், வாக்குச்சாவடிகளில் முகவர்களாக (Agents) திமுக மற்றும் அதிமுக ஆகிய பாரம்பரியக் கட்சிகளின் தொண்டர்களே நூற்றுக்கணக்கில் ஆதிக்கம் செலுத்துவதைக் காண முடிந்தது.

அதேபோல், வாக்குச் செலுத்த வந்தவர்களில் பெரும்பாலானோர் 40 வயதைக் கடந்தவர்களாகவே இருந்தனர்; சமூக வலைதளங்களில் அரசியல் புரட்சி பேசும் இளைஞர்களின் வருகை நேரடி வாக்குச்சாவடிகளில் குறைவாக இருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

இளைஞர்களின் இந்த மௌனமும், களத்தில் பழைய கட்சிகளின் வலுவான கட்டமைப்பும் தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மே 4-ஆம் தேதிதான் தெரியவரும்.

Exit mobile version