Friday, July 24, 2026
Homeசெய்திகள்மத்திய அமைச்சர்கள் உறுதிமொழி… 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்!

மத்திய அமைச்சர்கள் உறுதிமொழி… 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்!

பிரபலச் சமூகச் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் வந்து சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் தனது 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக முடித்துக் கொண்டார். கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மற்றும் வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வலியுறுத்தி நடத்தி வந்த இந்தப் போராட்டத்தின் போது, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை நேரில் சந்தித்தோ கடிதம் மூலமாகவோ ஆதரவு தெரிவித்தனர். குருகிராமத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்த நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து, அவர்கள் முன்னிலையில் ஜூஸ் அருந்தி அவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். நாட்டில் எந்தவித வன்முறையும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்ட தீர்வுகளின் அடிப்படையிலுமே இமுடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், பிரதமர் நரேந்திர மோடி சோனம் வாங்சுக் விரைந்து நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ள சூழலில், மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments