தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு எதிராகக் கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து வாக்களித்தது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான 22 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்த வரிசையில் ஓ.எஸ். மணியன், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஆர். ராஜேந்திரன், கே.சி. கருப்பண்ணன், ஈ.சி. கோவிந்தராசன், சு. பழனிசாமி, எஸ். ராமச்சந்திரன், உஷா ராணி, ஜெயசுதா லட்சுமிகாந்தன், சம்பத் குமார், தளவாய் சுந்தரம், நல்லதம்பி, மணி, முக்கூர் என். சுப்பிரமணியன், ஏ. ராஜசேகர், சு. ராஜேந்திரன், வெங்கடாசலம், வெற்றிவேல், வேலழகன், வேலு மற்றும் ஏ.பி. ஜெயசங்கரன் ஆகியோர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் ஆவர்.
அதே வேளையில், எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டைப் புறக்கணித்து, எஸ்.பி. வேலுமணி தலைமையிலான மற்றொரு பிரிவினர் முதல்வர் ஜோசப் விஜயின் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இந்தப் பட்டியலில் எஸ்.பி. வேலுமணி, ஹரி, காமராஜ், கே.பி. அன்பழகன், இசக்கி சுப்பையா, சத்யபாமா, மரகதம் குமாரவேல், மரகதம் வெற்றிவேல், லீமா ரோஸ், சுகுமார், சேகர், திலீபன், நடராஜ், நத்தம் விஸ்வநாதன், மோகன், ரவி மனோகரன், ராகேஷ், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, ஜெயக்குமார், ஹரி பாஸ்கர், சி. விஜயபாஸ்கர், அருள்மொழி வர்மன், சி.வி. சண்முகம் மற்றும் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 25 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட இந்த வெளிப்படையான பிளவு, தமிழக வெற்றிக் கழக அரசு தனது பெரும்பான்மையை மிக எளிதாக நிரூபிக்க முக்கியக் காரணமாக அமைந்தது.

