Home Uncategorized ஸ்டார்ட் … ஆக்ஷன்.. அத்தியாயம். 10

ஸ்டார்ட் … ஆக்ஷன்.. அத்தியாயம். 10

ஸ்டார்ட் … ஆக் ஷன்..

அத்தியாயம். 10.

இயக்குனர். எம்.ஜி.ஆர்.

உலகம் சுற்றும் வாலிபன்.. உலகையே வலம் வந்த வெற்றிச் சித்திரம்..

1970ம் வருடம்..!

திரு.எம்.ஜி.ஆர். அவர்கள்.. இந்தப் படத்தை ஆரம்பித்த போது… அவர்..

தமிழகத்தை ஆட்சி செய்த  தி.மு.க வின் சக்தி வாய்ந்த ஒர் .. அங்கம்..!..

திரையுலகின்.. வசூல்.. சக்ரவர்த்தி…!

அவர் திரையுலகில் பல வெள்ளி விழா படங்களை தந்து… தலை சிறந்த நடிகராகவும்..  நடிப்புக்காக மத்திய அரசின் உயர்ந்த  பாரத் விருது பெற்று…  புகழ் பெற்றிருந்த  கால கட்டம் அது!…

நம் இந்திய நாட்டுக்குள்…. காஷ்மீர்.. சிம்லா.. ஜெய்ப்பூர் அரண்மனை… இராஜஸ்தான் பாலை வனம்.. என்றெல்லாம்.. படம்.. எடுத்த அவர்.. தன்

சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி அவர்கள்.. தந்த யோசனைப்படி … முழுக்க.. முழுக்க.. வெளிநாடுகளில் நிகழ்வதாக காட்சிகள் அமைத்து.. படம் எடுக்க  முடிவெடுத்தார்!…

அவரே தயாரித்து … நடித்து.. இயக்க…

‘உலகம் சுற்றும் வாலிபன்’  படத்தை  ஆரம்பித்தார்!..

மின்னலிலிருந்து சக்தியை பிரித்தெடுத்து அணு சக்தியை உருவாக்கும் விஞ்ஞானி முருகன்..!..

அதன் ஃபார்முலா …. தீயவர்கள் கையில் போய் விடக் கூடாது என்று உலகத்தின் பல் வேறு இடங்களில் அதை மறைத்து வைத்து விட்டு.. தன் ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்தி.. ஆக்க சக்திக்கு தன்.. விஞ்ஞான கண்டுபிடிப்பை  பயன்படுத்த முயல்கிறார்..!.

அதற்குள் வில்லனால் விஞ்ஞானி முருகன் மனநோயாளியாக ஆக்கப்படுகிறார் !.. முருகனின் தம்பி CBCID .ராஜு தன்  அண்ணன் முருகனைத் தேடிக் கண்டு பிடிக்கவும்.. தீயவர்களிடமிருந்து அண்ணன் ஒளித்து வைத்த ஃபார்முலாவை காப்பாற்றவும் போராடுகிறார்!.. முடிவில் அண்ணன் தம்பி இருவரும் இணைந்து தர்மத்தை நிலை நாட்டுகிறார்கள்!..

விஞ்ஞானம் கலந்த விறுவிறுப்பு குறையாத ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்ட Sci-fi கதை!..

அன்றைய James bond ..இன்றைய Mission Impossible.. பாணியில் உலகம்.. சுற்றும்.. வாலிபனின் கதைக் களம்.. அமைக்கப் பட்டது..!.

கதையை எம்.ஜி.ஆர். கதை இலாகாவைச் சேர்ந்த.. திரு.R.M. வீரப்பன் அவர்கள்.. திரு. வித்வான்இலட்சுமணன் அவர்கள்.. மற்றும்.. A.K.T. சாமி அவர்கள்.. உருவாக்கினார்கள்..

வசனத்தை திரு.K. சொர்ணம் அவர்கள்.. எழுதினார்…!

திரு.M.S. விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்தார்!.

இயக்குநர். திரு. ப.நீலகண்டன் அவர்கள்….

திரைப் பட ஆக்கத்தில்.. உறுதுணையாக பணியாற்றினார்..!

விஞ்ஞானி முருகனாகவும்….CBCID  ராஜுவாகவும் இரட்டை வேடங்களில் திரு எம் ஜி ஆர் அவர்கள் நடித்தார்!..

முதலில் இந்தப் படத்திற்கு ‘ மேலே… ஆகாயம்.. கீழே பூமி’ என்று பெயரிடப் பட்டிருந்தது..

செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரும்.. விளம்பரத்தில் இடம் பெற்றிருந்தது..

ஆனால்.. செல்வி, ஜெ. ஜெயலலிதா அவர்கள்.. பேசிய சில கருத்துகள்… திரு. எம்.ஜி.ஆர். அவர்களை அதிருப்தி கொள்ள வைத்தது..!

செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும் பதிலாக செல்வி. மஞ்சுளா அவர்களை நடிக்க வைத்தார்…!

படத்தின் பெயரும்… ‘உலகம் சுற்றும் வாலிபன்’.. என்று மாற்றப்பட்டது!

படப்பிடிப்பு இனிதே துவங்கியது….!

அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த கலைஞர்.மு.கருணாநிதி அவர்கள் … வெளி நாடுகளில் திரு.எம்.ஜி.ஆர். படம் எடுக்கச் சென்ற போது விமான நிலையத்துக்கே வந்து வழி அனுப்பி வைத்த சம்பவமும் நடந்தது!.

ஆனால் ஓரிரு வருடங்களில் அவர்கள்.. இருவரும்.. அரசியல் ரீதியாகப் பிரியும்.. நிலை.. உருவானது..!..

40 ஆண்டு கால நட்புக்கு விடை கொடுத்து இருவருமே எதிரும்… புதிருமாக அரசியல் நடத்த நேர்ந்தது…!

முதல்வர்  கலைஞர். மு.கருணாநிதி அவர்களை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவி.. அப்போது நடைபெற்ற சட்டமன்ற பாராளுமன்ற இடைத் தேர்தலில்களில் வெற்றி வாகை சூடி தன்னுடைய அரசியல் கட்சிக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்று … புரட்சித் தலைவராக வலம் வர ஆரம்பித்தார்.. திரு எம் ஜி ஆர் அவர்கள்!..

அவரது.. அரசியல் வளர்ச்சியையும்… திரையுலக வளர்ச்சியையும்.. ஒடுக்கியே தீர வேண்டிய நிலைக்கு ஆளும் கட்சி தள்ளப்பட்டது..!

அந்த நேரத்தில் தான் உலகம் சுற்றும் வாலிபனை திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் தயாரித்து இயக்கினார்!

படத்தில் பற் பல சோதனைகளை சந்தித்தார்!..

வெளிநாடுகளில் படம் பிடிப்பது என்பது அந்த கால கட்டத்தில் அவ்வளவு சுலபமில்லை!..

சிங்கப்பூர் …. கோலாலம்பூர்…பாங்காக்.. ஹாங்காங் …என  பற்பல.. வெளிநாடுகளில்.. படப்பிடிப்பை நடத்தினார்…!

கடலில்.. படகு.. சேஸ்..!.. முழுக்க.. முழுக்க.. Under water photography யில்.. பாடல் காட்சி..! மிதக்கும்.. படகு.. மார்க்கெட்..!புத்தர்.. ஆலயங்கள்..! பெரிய புத்தர் சிலை! வானில்.. ஊறும்.. இரயில்கள்..!பிரமாண்டமான எக்ஸ்போ.. 70 பொருட்காட்சி.. அரங்கங்கள்..!

என.. மக்களை.. வேறு உலகத்துக்கே கொண்டு செல்லும் வண்ணம் உலகம் சுற்றும் வாலிபன்… காட்சிகள் படமாக்கப் பட்டன!..

தேனாக பாடல்கள்.. வித்தியாசமான சண்டைக் காட்சிகள்… என திரைப் படம்.. வளர்ந்தது…!

ஆனால்..

சோதனைகள் பட்டியல்.. போட.. ஆரம்பித்தன!

சோதனை தாண்டிய சாதனை தானே.. திரு.எம்.ஜி. ஆர்.. அவர்களின்.. ஜாதகம்!.

இந்தப் படம் மட்டும் விதிவிலக்காகி விடுமா …என்ன!..

வெளிநாடுகளில் எடுத்த பல காட்சிகளின் ..நெகட்டிவ் ஃபிலிம் சுருள்கள்… லேபில்.. டெவலப் செய்யும் போது அழிந்து போனது!. அவைகளை எல்லாம் match  செய்து காட்சிகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம்!..

அன்னிய செலாவணி பிரச்னைகள்..!

ஆளும் கட்சியைப் பகைத்துக் கொள்ளப் பயந்த.. சக.. தொழில் நுட்பக்.. கலைஞர்கள்…!விநியோகஸதர்கள்..! பத்திரிக்கைகள் !… அவர்களால் ஒதுக்கப்பட்ட திரு.எம்.ஜி.ஆர். அவர்கள்

தனி மனித யுத்தம்.. போல.. உலகம்.. சுற்றும்.. தனி மனிதன்.. போல.. போராட வேண்டிய நிலைக்கு   தள்ளப்பட்டார்..!

துப்பாக்கி குண்டையே.. தாங்கிய.. தேகம்..

பழுதுபட்ட குரலிலும்.. காந்தமாய்… கர்ஜித்த திடம்..!

தடைகளை தாண்டி படத்தை முடித்தார்!

இரண்டு வருட போராட்டங்களுக்கு பின்பு படம் ஒரு வழியாக ரிலீஸுக்கு தயாரான  நேரம்…

படம் வெளி வருமா? என்ற சூழ்நிலை உருவானது!..

திரு.எம்.ஜி. ஆர். அவர்கள்.. அதையெல்லாம்  எப்படி சமாளித்தார்?

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

Exit mobile version