Sunday, March 22, 2026
HomeUncategorizedஸ்டார்ட்...ஆக்ஷன். அத்தியாயம்.18. இயக்குனர். ஏ.வி.மெய்யப்பன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்…ஆக்ஷன். அத்தியாயம்.18. இயக்குனர். ஏ.வி.மெய்யப்பன்- சிறப்பு கட்டுரை!

 

ஸ்டார்ட்…ஆக்ஷன்.

அத்தியாயம்.18.

இயக்குனர். ஏ.வி.மெய்யப்பன்.

வருடம்…1945…!

ஏ.வி. மெய்யப்பன் அவர்கள் வள்ளியின் நாட்டுப் புற கதையை படமாக எடுக்க  முடிவு செய்தார்!..

முருகனுக்கும் வள்ளி என்ற பழங்குடி பெண்ணுக்கும் இடையே மலர்ந்த காதல் நாடகங்களாக மேடை தோறும் நடத்தப்பட்டு வந்தது!

‘வள்ளித் திருமணம்’ என்கின்ற பெயரில் 1921 இல் மௌனப் படமாகவும் வெளியானது!

மறுபடியும் 1933 இல் ‘வள்ளித் திருமணம்’ என்ற பெயரில் பேசும் படமாகவும் வெளி வந்தது!

அந்த வள்ளித் திருமண கதையை 

‘ஸ்ரீ வள்ளி’ என்ற பெயரில் படமாக எடுக்க ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் முடிவு செய்தார்!

எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களை கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பினார்… ஆனால் சில காரணங்களால் அது அமையவில்லை! 

தன்னுடைய ‘நந்தகுமார்’ படத்தில் நடித்திருந்த டி.ஆர்.மகாலிங்கத்தை கதாநாயகனாக்க முடிவெடுத்தார் ! திரைப் படம் வெளியாகும் வரை வேறு எந்தப்  படங்களிலும் நடிக்க கூடாது என்ற ஒப்பந்தத்தையும் எழுதி வாங்கிக் கொண்டு டி.ஆர். மகாலிங்கத்தை கதாநாயகனாக்கினார்!..

அதைப் போலவே 1937 இல் அவர் தயாரித்திருந்த பாலமோகினி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய பேபி ருக்மணியை … குமாரி ருக்மணியாக கதாநாயகியின் வேடத்திற்கு தேர்வு செய்தார்!

.ஏ.வி. மெய்யப்பன் அவர்களே படத்தை இயக்கினார்! A.K.கிருஷ்ணசாமி இயக்கத்தில் துணை இருந்தார்!

பிரகதி ஸ்டூடியோ … தியாசாபிகல் சொஸைட்டி வளாகம்.. அடையாறு … அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்ரீ வள்ளி படமாக்கப்பட்டது! நான்கு வயது யானை ஒன்று திருச்சூரில் இருந்து வர வழைக்கப்பட்டது!அதன் உரிமையாளர் சாமி ஐயர் பணம் வாங்க மறுத்து யானையை ஃப்ரீயாக படத்தில் நடிக்க வைத்தார்!

ஶ்ரீ வள்ளி திரைப் படம் தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றிய படம் என்பதால் ஏதாவது தெய்வ குற்றம் வந்து விடுமோ என்ற பயம் திரு ஏ.வி. மெய்யப்பன் அவர்களுக்கு வந்தது! அதனால் மனைவி ராஜேஸ்வரி அவர்களை அழைத்துக்கொண்டு முக்கியமான முருகன் கோயில்களுக்கெல்லாம்  சென்று படத்தில் ஏதாவது தீங்கு நேர்ந்து விட்டால் மன்னித்துக் கொள்ளும் படி முருகப்  பெருமானை வேண்டிக் கொண்டார்!

படப்பிடிப்பு தளத்தில்.. எந்த தவறும்.. நடக்காமல் …காக்க வேண்டும்.. என்று வேண்டி விட்டு அதற்கு பிறகு தான் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்!

தயாரிப்பு செலவு  இரண்டு லட்ச ரூபாய் ஆனது!..

ஸ்ரீவள்ளி  திரைப் படத்தில் ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் செய்த மிகப்  பெரிய புதுமை … படத்தில் கதாநாயகியாக நடித்த குமாரி ருக்மணியின் குரல் அவருக்கு பிடிக்காததால்… பெரியநாயகி அவர்களைப்   டப்பிங் பேச வைத்தார்! பாடல்கள் பாட வைத்தார்! ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கில் post synchronisation யுக்தி மூலம்.. ஒரிஜினல் சவுண்ட் டிராக் அழிக்கப் பட்டு.. பெரியநாயகி யின்.. Sound track இணைக்கப்பட்டு.. Altered sound track.. மூலம்… புதிய பிரதிகள் எடுக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது!

குமாரி ருக்மணிக்கு இதில் உடன்பாடு இல்லை! தனக்குப் பதிலாக பெரியநாயகி அவர்களின் குறல் பயன் படுத்தப்பட்டதில் அதிர்ச்சியான குமாரி ருக்மணி ஏ .வி .மெய்யப்பன் அவர்களோடு போட்டிருந்த மூன்று  படங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்தார்!..

ஏ. வி.மெய்யப்பன் அவர்கள் இந்த இழப்பை எண்ணி கவலைப் படவில்லை…!

AVM நிறுவனம் வழங்கும் திரைப் படங்கள்.. நேர்த்தியாக… தரத்தோடு விளங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்!

‘ஸ்ரீவள்ளி’ திரைப்படம்  பெரிய வெற்றி பெற்றது!.. பாடல்களும்.. வசனங்களும்.. பட்டித் தொட்டி எங்கும்.. முழங்கின! படத்தின் வசனங்கள் கிராம போன் ரெக்கார்டுகளாக பதிவாகி விற்பனை செய்யப்பட்டு அமோக வெற்றி பெற்றது…!

1945.

மதராஸ் சாந்தோமில் இருந்த.. தங்கள்.. ஸ்டுடியோவை.. வட பழனி.. கோடம் பாக்கத்திற்கு மாற்றி.. படத் தயாரிப்பை தொடர.. ஏ.வி.மெய்யப்பன் அவர்கள்.. ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம்..!

இரண்டாம் உலகப் போர் உலகையே அலைக் கழித்துக் கொண்டிருக்க … மெட்ராஸ் நகரம்  திகிலோடு வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டம்.. அது..!

போர் காலம் என்பதால்.. போதிய..மின் சார சப்ளை கோடம்பாக்கத்திற்கு தர முடியாத சூழ்நிலை உருவானது..

மின் இணைப்பு கிடைக்காததால்..  படப்பிடிப்பை மதராஸில் தொடர முடியாத நிலைமை?

அப்போது ..

ஏ.வி. மெய்யப்பன்.. அவர்கள் செய்த.. செயல்?

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments