ஸ்டார்ட் … ஆக் ஷன்
அத்தியாயம் – 3.
எல்லிஸ் ஆர். டங்கன்.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி தங்கள் பதிபக்தி நாடகத்தை முதலியாரும் செட்டியாரும் திருடி விட்டார்கள் … என வழக்கு போட்டார்கள்! இரண்டும் ஒரே கதை! கதாநாயகியின் பெயரும் லீலாவதி .. என்று பல ஒற்றுமைகளை பட்டியலிட்டு வழக்காடினார்கள்..
திரு.எஸ் எஸ் வாசன் தான் எழுதிய சதிலீலாவதி கதையும் … பதிபக்தி கதையும் …1860 இல் Ellen wood எழுதிய Danesbury House என்ற ஆங்கில நாவலை தழுவி தான் எழுதப்பட்டு இருக்கிறது! அதனால் இந்த கதைக்கு தாங்கள் யாருமே உரிமை கோர முடியாது அது தழுவல் கதை !..என்று வாதிட்டார்..! வழக்கில் வெற்றியும் பெற்றார்கள்!..

குடியின் தீமை.. அதனால் கஷ்டப்படும்.. ஒரு பெண்ணின்.. வாழ்க்கை … அழுத்தமாக சொல்லப்பட்ட படம் இது.. இந்தப் படத்தில் இலங்கை தேயிலைத் தோட்டத்தில் தமிழர்கள் படும் பாடுகளும் … எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் காட்டப்பட்டன!. படத்தில் நடித்த நடிகர்களில் பெரும்பாலோர் நாடக நடிகர்கள்! அவர்களது நாடக பாணி நடிப்பிலிருந்து அவர்களை மாற்றி … உரத்தக் குரலில் பேசுவதை தவிர்த்து.. Soft ஆகப் பேசி .சினிமா பாணியில் முக உணர்ச்சிகளை காட்ட வைக்க….. எல்லீஸ் டங்கன் படாத பாடு பட்டார்!
திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அப்போது சைக்கிள் ஓட்டத் தெரியாது… காட்சியில் அவர் சைக்கிள் ஓட்ட வேண்டிய சூழல் வரும் போது இருவர் இரு பக்கம் பிடித்துக் கொள்ள அவர் சைக்கிளில் ஏறி அமர்ந்ததும் அவர்கள் ஒதுங்கிக் கொள்ள.. அவர் ஓட்டி சமாளித்திருக்கிறார்….
திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் மேடை நாடக பாணியில் தான் நடிக்க.. வந்திருக்கிறது.. அவரையும் mould செய்து.. எல்லிஸ் டங்கன் நடிக்க வைத்திருக்கிறார்..!
ஆணியடித்தது போல நிற்கும்.. கேமராவை.. பாத்திரங்களோடு நடக்க வைத்து.. நிறைய கேமரா மூவ் மெண்ட்ஸ் ஷாட்டுகளை எடுத்திருக்கிறார்.. Panning.. Tilting.. Truck in போன்ற யுக்திகளை பயன் படித்தினார்..!
காபரே.. டான்ஸை படத்தில் புகுத்தியவரும் அவரே..
அத்தோடு மட்டுமல்ல! அந்தக் கால கட்டங்களில் பாடல்களை …
முன்னாலேயே ஒளிப்பதிவு செய்து படம் எடுக்கும் டெக்னிக்..கிடையாது! அரங்கத்தின் ஒரு பக்கம் இருந்து.. ஆர்கெஸ்ட அமர்ந்து இசைக்க… நடிகர்கள் கேமரா முன்னாள் பாடி படமாக்குவார்கள்.. அதனால் கேமராவை ஸ்டெடியாக குறிப்பிட்ட இடத்தில் வைத்து தான் படமாக்க வேண்டிய கட்டாயம் !
அதையும் மீறி பல விதமான mobile கேமரா.. ஷாட்ஸ்களை எடுத்தவர் எல்லிஸ்..டங்கன்..
படத்தொகுப்பையும்.. திரு.சர்க்காரோடு சேர்ந்து செய்திருக்கிறார்..
சதி லீலாவதி படம் பெரும் வரவேற்பை பெற்றது!
திரு.எஸ்.எஸ்..வாசன் விநியோகஸ்தராக மாறி படத்தை சென்னையில் வெளியிட்டார் ! பிற்காலத்தில் திரைப்படத் துறையில்.. இந்திய அளவில் சாதிக்கும் வண்ணம் அவர்… உயர.. சதி லீலாவதி படம்தான் பிள்ளையார் சுழி போட்டது!
ஒரு வெளிநாட்டுக்காரர் இயக்கிய முதல்.. இந்தியப் படம் என்ற பெருமையை
சதி லீலாவதி.. படைத்தது..
அதன் வெற்றி எல்லிஸ் டங்கனை பல பெரிய படங்களை இயக்க வைத்தது..
அதில் சரித்திர சிறப்பும் பெற்ற திரைப்படம்.. எது தெரியுமா?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்.