Tuesday, May 26, 2026
Homeசெய்திகள்அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு... ...

அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு… 16 எம்எல்ஏக்கள் அடுத்த கட்ட முடிவு?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 16 எம்எல்ஏக்கள் சேர்ந்து கட்சிக்குள்ள நடக்குற பஞ்சாயத்துக்கு சுமூகமான முடிவு எடுக்கணும்னு இன்னைக்கு சாயங்காலம் வரைக்கும் கெடு விதிச்சிருக்கறதா வர்ற தகவல்கள் கட்சி வட்டாரத்துல பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது!

கடந்த முறை சட்டமன்றத்துல நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது தவெக அரசுக்கு ஆதரவா ஓட்டுப் போட்ட இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு, தாங்கள் எடுத்த அந்த முடிவை வாபஸ் வாங்குறதுக்கான முறையான கடிதத்தை சபாநாயகர்கிட்ட குடுக்குறதுக்கான கடைசி டைம் வர்ற 28-ஆம் தேதியோடு முடியுது;

இந்த இக்கட்டான சூழ்நிலையில, எடப்பாடி பழனிசாமி இன்னைக்கும் எந்தவொரு முடிவும் எடுக்காம இழுத்தடிச்சா, அடுத்த கட்ட அதிரடி ஆட்டத்துல இறங்குறதுக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு பக்கா பிளான் போட்டு ரெடியாகி வச்சிருக்காங்கன்னு கோட்டை வட்டாரச் செய்திகள் கசி யும் சூழலில் குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மூலம் வழங்கப்பட்டிருக்குது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments