Friday, May 8, 2026
Homeசெய்திகள்“விஜய் முதல்வராக வேண்டும்!” கோவில்களில் TVK தொண்டர்கள் சிறப்பு வழிபாடு!

“விஜய் முதல்வராக வேண்டும்!” கோவில்களில் TVK தொண்டர்கள் சிறப்பு வழிபாடு!

தமிழக வெற்றி கழகத் (TVK) தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வேண்டி, கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சாலைக்கரை மாரியம்மன் கோவிலில் அக்கட்சியின் தொண்டர்கள் இன்று (மே 8, 2026) சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக டிவிக்கி உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்வதிலும், ஆளுநரின் அழைப்பைப் பெறுவதிலும் நிலவும் இழுபறி நீங்க வேண்டும் என்பதே இவர்களது பிரார்த்தனையாக இருந்தது.

அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்த தொண்டர்கள், தங்கள் ‘தளபதி’ விரைவில் அரியணை ஏற வேண்டும் என உருக்கமாக வேண்டிக்கொண்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments