Ai created image
பெண்களுக்கான மாதவிடாய் விடுமுறை குறித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பது அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்று கூறி அந்த மனுவை நிராகரித்துள்ளது.
இத்தகைய கட்டாய விடுமுறை விதிகள் நடைமுறைக்கு வந்தால், நிறுவனங்கள் பெண் ஊழியர்களைப் பணியமர்த்தத் தயங்கும் சூழல் உருவாகலாம் என்றும், அது பெண்களுக்கு எதிராகவே முடியும் என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
“பெண்களுக்கு நன்மையளிக்க நினைக்கும் இத்தகைய முடிவுகள், உண்மையில் அவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் தடையாக மாறிவிடக்கூடாது” என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் மட்டுமே உரிய ஆய்வு செய்து முடிவெடுக்க முடியும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
