இன்று நேற்றல்ல … எத்தனையோ காலமாக மக்கள் எதனெதனை முன்னிட்டோ தாங்கள் கடைப்பிடிக்கும் மதக்கலாச்சாரத்திலிருந்து வெளியேறி, வேற்று மதத்தினை தழுவும்நிலை இருந்து வருகிறது. அதற்கான காரணங்களும் நோக்கங்களும் வேறுபடக்கூடும். இப்படித்தான் தமிழகத்தில் கி.பி.ஏழாம் நூற்றாண்டிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவர் .
சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த தனது மூத்த சகோதரியான திலகவதி அம்மையின் பராமரிப்பில் வளர்ந்தார் மருள்நீக்கியார். தனது தம்பி கல்விகேள்விகளில் சிறந்து விளங்க அரும்பணியாற்றினார் திலகவதி. மருள்நீக்கியாரும் அவ்வாறே அவை அனைத்திலும் சிறந்து விளங்கினார். அவரை பாடலிபுத்திரத்திற்கு திலகவதி அனுப்பி வைத்தார். அங்கு சென்ற மருள்நீக்கியார் சமண நூல்களைக் கற்று, அதன்பால் ஈர்க்கப்பட்டு ”தருமசேனர்” என்னும் பெயருடன் சமண மதத்தினை தழுவி தமிழகம் திரும்பி வந்தார். தனது தம்பி பெரும் சிறப்புகள் வாய்ந்த சனாதன தர்மத்தின் சைவநெறியைக் கைவிட்டு மதம் மாறி வந்ததை காண சகிக்காமல் இறைவன் சிவனிடம் மனமுருக வேண்டினார். இங்குதான் சிவனின் திருவிளையாடல் தொடங்கியது.
