Home Uncategorized தென்காசி வழியாக ரயில்கள் இயக்கம்

தென்காசி வழியாக ரயில்கள் இயக்கம்

கோவில்பட்டி – துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. மார்ச் 25 முதல் 29 வரை மற்றும் ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து  புறப்படும் தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16191) விருதுநகர் – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மேலும் மார்ச் 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மதுரை – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2. மறுமார்க்கத்தில்  மார்ச் 26 முதல் 30 வரை மற்றும் ஏப்ரல் 2 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16192) நாகர்கோயில் – விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மேலும் மார்ச் 31 ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16192) நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும்.

3. மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் (16321) நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

4. மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் (16322) மதுரை – நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

5. மார்ச் 25 முதல் 31 வரை குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் – சென்னை எழும்பூர்  எக்ஸ்பிரஸ் (16128) திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ஏப்ரல் 1 அன்று குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எக்ஸ்பிரஸ் (16128)  அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

6. மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) சென்னை – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

7. மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627/ 22628) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

8. மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16731/ 16732) விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

9. மார்ச் 28 முதல் ஏப்ரல் 2 வரை மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் (16729) மதுரை – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  மறுமார்க்கத்தில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் (16730) திருநெல்வேலி – மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

10. மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16236) விருதுநகர் – தூத்துக்குடி  இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் (16235) தூத்துக்குடி – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

11. மார்ச் 26, 29, 30 ஆகிய நாட்களில் மும்பை தாதரிலிருந்து புறப்படும் தாதர் –  திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (11021) விருதுநகர் – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மார்ச் 28, 31 ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி – தாதர் எக்ஸ்பிரஸ் (11022) திருநெல்வேலி – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

12. மார்ச் 27 அன்று புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய புதுச்சேரி – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (16861) மற்றும் மார்ச் 28 அன்று கன்னியாகுமரி இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16862) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

13. மார்ச் 22 மதுரை கோட்ட பகுதியில் வரும் காஷ்மீர் ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) விருதுநகர், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

Exit mobile version